உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே கல்லூரியில் குதிரை பராமரிக்கும் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
களியக்காவிளை அருகே கல்லூரியில் குதிரை பராமரிக்கும் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அதில் கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த அகில் விஜயன் (வயது 25) குதிரை பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவர் கேரள மாநிலம் தனுவச்சபுரம் பகுதியில் ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காலையில் படிப்பு முடிந்து இரவு களியக்காவிளை அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2 அரை வருடமாக குதிரை பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் குதிரைகளை பராமரிக்கும் இடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை கல்லூரிக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்தார்? அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.