உள்ளூர் செய்திகள்
திருச்சோற்றுத்துறை ஓதனவனேஸ்வரர் கோவிலில் மகா ருத்ர ஹோமம் - திருக்கல்யாணம்
ஓதனவனேஸ்வரர் கோவிலில் மகா ருத்ர ஹோமம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவையாறு:
திருவையாறு அருகே ஏழூர்த் தலங்களுள் 3வது தலமான திருச்சோற்றுத்துறையில் அன்னபூரணி அம்பிகை சமேத ஓதனவனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலின் ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பெறவேண்டி, நேற்று காலையில் மகா ருத்ர ஹோமமும் 108 கலச அபிஷேகமும் நடந்தது.
இனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம் அன்னதாம் வழங்கப்பட்டது.
மேலும், புதியதாக செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில் சுவாமி, அம்பாளை எழுந்தருளச் செய்து பிரகார உலா வந்து, நேற்றிரவு முதன்முதலாக பள்ளியறைப் பூஜை விழா நடந்தது.
விழாவிற்கு திருக்கயிலாயப் பரம்பரை சூரியனார்கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை அன்னபூரணி தர்மசத்திரம் மற்றும் வேத பாடசாலை பரம்பரை அறங்காவலர் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.