உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க., தனித்து போட்டியிடுவது ஏன்? அண்ணாமலை விளக்கம்

Published On 2022-02-15 12:31 IST   |   Update On 2022-02-15 12:31:00 IST
தி.மு.க. அளித்துள்ள பொங்கல் தொகுப்புகள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் அங்கீகாரம் பெற்ற 8 கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் குறிப்பாக பா.ஜ.க. உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு மட்டும்தான் மும்முனைப்போட்டி நிலவுகிறது. மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அதேபோல மாநிலத்தில் தி.மு.க. 9 மாதங்களாக ஆட்சியில் உள்ளது. உள்ளாட்சியில் நடைபெறும் அனைத்துப் பணிகளுக்கும் மத்திய அரசு நிதியை ஒதுக்குகிறது.

அது பொலிவுறு நகரத் திட்டம், குடிநீர் திட்டம், வீடில்லாதோறுக்கு வீடு, சமையல் எரிவாயு உருளை ஆகிய அனைத்துக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க., தனித்துப் போட்டியிடுவதற்கு முதல் காரணம் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் ஊழல், லஞ்சம் இல்லாமல் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான். 

ஆனால் இங்குள்ள அரசு 30 சதவீத கமிஷன் பெற்று கொண்டுதான் பணியை மேற்கொள்கின்றனர். இதனை உள்ளாட்சியில் உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. தி.மு.க. அளித்துள்ள பொங்கல் தொகுப்புகள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.

பொங்கல் தொகுப்பை விநியோகம் செய்வதற்காக தமிழக அரசு வாங்கிய மஞ்சள் பையில் மட்டுமே ரூ.130 கோடி கமிஷன் அடித்துள்ளனர். தமிழகத்தில் 40 சதவீதம் பேர் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். 73 சதவீதம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிவித்துள்ளனர்.

மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டும்படி வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல உள்ளது. தி.மு.க.வின் 517 தேர்தல் வாக்குறுதிகளில் முழுமையாக 7 தேர்தல் வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, உள்ளாட்சித்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

Similar News