உள்ளூர் செய்திகள்
வேட்பாளர்கள் தினசரி செலவு விவரம் அளவை தாண்டினால் புகார் செய்யலாம்
தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினசரி எவை எவைக்கு எவ்வளவு செலவு செய்து கொள்ளலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு தொண்டர்களை திரட்டுவார்கள். அவர்கள் சும்மா வந்து பிரசாரம் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு கை செலவுக்கு பணம் மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதே போல் ஆட்டோக்களில் பிரசாரம், துண்டு பிரசுரம் என்று பலவகையான செலவுகளை தினமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தினசரி செலவளிக்கும் செலவு விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
பேன்ட் வாத்தியங்களுக்கு தினமும் ரூ.1500 முதல் 20 ஆயிரம் வரை, ஆட்டோ பிரசாரத்துக்கு ரூ.15,000, வீடு வீடாக நேரில் சென்று வாக்கு கேட்கும் 50 தொண்டர்களுக்கு தலா ரூ.100, காலை சிற்றுண்டிக்கு ரூ.2 ஆயிரம், நொறுக்கு தீனி மற்றும் செலவுகளுக்காக ரூ.2 ஆயிரம், ஷாமியானா பந்தல் வாடகைக்கு ஆயிரம் ரூபாய், நாற்காலி ஒன்றுக்கு ரூ.5 வாடகை வீதம் குறைந்த பட்சம் 100 நாற்காலிகள் போட்டுக் கொள்ளலாம்.
பூத் ஏஜெண்டுகளுக்கு ஒரே தவணையில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கலாம்.
இதை விட அதிக அளவில் செலவினங்கள் செய்யப்பட்டால் கண்காணிக்கப்படுவார்கள். பொதுமக்களும் சென்னை மாநகராட்சி இணைய தளம் வழியாக புகார் அளிக்கலாம்.

இதுவரை 45 வழக்குகள் பறக்கும் படை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக இதுவரை 41 புகார்கள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.