உள்ளூர் செய்திகள்
அமராவதி பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போனுக்கு, நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், தேதி, நேரம் குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும்.
உடுமலை:
உடுமலை அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் கூட்டுறவு சங்கம், மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் மற்றும் ருத்ராபாளையம் கூட்டுறவு சங்கம் ஆகிய 3 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்யும் வகையில் DPC இணைய தளத்தில், சம்பா கொள்முதல் பருவம் - 2022ல் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை, www.edpc.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தங்களுக்கு அருகிலுள்ள கொள்முதல் மையங்களை தேர்வு செய்யலாம்.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போனுக்கு, நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், தேதி, நேரம் குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்வதற்கு அருகிலுள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு, திருப்பூர் மண்டல அலுவலரை, 94437 32309 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.