உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் நடந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 361 வகை பறவைகள்

Published On 2022-02-15 10:11 IST   |   Update On 2022-02-15 10:11:00 IST
கடந்த 2 நாட்களாக வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்று பணியை மேற்கொண்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய 5 தாலுகாவில் உள்ள 9 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

கடந்த 2 நாட்களாக  வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்று இப்பணியை மேற்கொண்டனர். 

நஞ்சராயன்குளத்தில் 63, மாணிக்காபுரம், 38, சின்னாண்டிபாளையத்தில் 40, ராமியம்பாளையம் 39, சாமளாபுரம் 34, தாமரை குளம்  23, சங்கமான்குளம் 46, சேவூர் 39 மற்றும் செம்மாண்டம்பாளையம் 39 என 361 வகை பறவை இனங்கள் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து திருப்பூர் வனச்சரகர் செந்தில்குமார் கூறியதாவது:-

5 தாலுகாவில் உள்ள 9 குளம், ஏரிகளில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி சென்று வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பறவைகள் குறித்து அறியும் வகையில் கணக்கெடுப்பு பணி முதன் முறையாக திருப்பூரில் நடந்ததுள்ளது. 

பறவைகளின் தோற்றத்தை பார்த்து கணக்கெடுப்பு செய்தனர். பறவைகளின் எச்சத்தை வைத்து கணக்கெடுப்பு பணி நடந்தது. ஒவ்வொரு குளத்தில் பல வகையான பறவை இணங்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது. 

இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News