உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட சதீஷ்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலையை 2-வது நாளாக தேடும் போலீசார்

Published On 2022-02-15 09:39 IST   |   Update On 2022-02-15 09:39:00 IST
கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மயிலாடுதுறை மாவ ட்டம் குத்தாலம் தாலுகா போனேரிராஜபுரம் வைக் கிள் கீழத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 23). திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரது மகன் ரஞ்சித் (22). இவர்கள் 2 பேரும் திருப்பூர் அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தி விட்டு அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் எம்.பி.நகரில் உள்ள காட்டுப்பகுதிக்கு 2 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு ரஞ்சித்தை கத்தி, அரிவாளால் அந்த கும்பல் தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பிய ரஞ்சித் குடியிருப்பு பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்தை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சதீசை கும்பலிடம் இருந்து மீட்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை செய்த கும்பல் சதீஷின் தலையை தூக்கிச்சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்குள்ள புதர் பகுதியில் சதீஷின் தலை வீசப்பட்டுள்ளதா? என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை.

சதீசை மர்மகும்பல் எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. ரஞ்சித்திடம் போலீசார் விசாரித்தபோது பணம்-செல்போனை கேட்டபோது கொடுக்க மறுத்ததால் 2 பேரையும் கும்பல் கடத்தி சென்றதாக தெரிவித்தார். இதனால் வழிப்பறி சம்பவத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் பாரதிநகர், எம்.பி.,நகர் பகுதியில் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அதில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. சில தடயங்களும் கிடைத்துள்ளது. அதனை வைத்து கும்பலை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட சதீஷின் தலையை 2-வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர்.


Similar News