உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கனரக வாகனங்களால் நிலத்தடி குழாய் சேதம்- விவசாயிகள் புகார்

Published On 2022-02-15 09:23 IST   |   Update On 2022-02-15 09:23:00 IST
விவசாயிகளுக்கு உரிய நில மதிப்பில், உயர்ந்தபட்ச தொகையும், நீண்ட கால மரப்பயிர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
உடுமலை:

உடுமலை ராகல்பாவியில் மின்கோபுரம் மற்றும் மின்வழிபாதை அமைவதால்  பாதிக்கும் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கக்கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில், மின்பாதையை மாற்றியமைக்க கனரக வாகனங்களை பயன்படுத்துவதால், நிலத்தடியில் உள்ள குழாய், மோட்டார் மின் இணைப்புகள் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு உரிய நில மதிப்பில், உயர்ந்தபட்ச தொகையும், நீண்ட கால மரப்பயிர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

திண்டுக்கல் 6 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கிய நிவாரணத்தொகையை, மின்வாரியத்தினரும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News