“எங்கள் வீட்டுப்பிள்ளை நீ” ஷேக் அலிக்கு பொதுமக்கள் புகழாரம்
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் 172-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.ஷேக் அலி வார்டுக்கு உட்பட்ட காமராஜர்புரம் நேரு நகர் கெங்கையம்மன் கோயில் தெரு மருது பாண்டியபுரம் உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது அவருக்கு பெண்களின் உற்சாக வரவேற்பு அதிகமாக இருந்தது. ஒவ்வொரு வீடு வீடாக வாக்கு கேட்ட அவருக்கு வாக்காளர்கள் வெற்றி திலகமிட்டு, “எங்கள் வீட்டு பிள்ளை நீ, நீங்கள்தான் எங்கள் ஆள்” என்று உற்சாகம் அளித்து ஊக்கம் அளித்தனர்.
அப்போது பேசிய ஷேக் அலி, “உங்கள் வாழ்த்துக்கும் ஆசிக்கு ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். மக்கள் பணி என்பது மனதார இறங்கி செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம். இதன்படி என்னுடைய ஒவ்வொரு பணியும் நீங்கள் பாராட்டும் படி தான் இருக்கும். சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி மின்விளக்கு ஆகியவை தவறாமல் பராமரித்து நம் வார்டை நல்ல முறையில் வைப்பதுடன் பொது மக்களின் எந்த பிரச்சனை என்றாலும் அந்தப் பிரச்சனையை எப்படி அணுகி தீர்க்க முடியுமோ, அந்த முறையில் தீர்க்க வழிவகை செய்வேன். உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி”.
இவ்வாறு அவர் பிரசாரம் செய்தார்.