உள்ளூர் செய்திகள்
நம் வார்டு நம் மக்கள் என்ற தாரக மந்திரத்தோடு செயலாற்றுவேன்- பா.ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்குமார்
சென்னை மாநகராட்சி தேர்தலில் 129-வது வார்டு பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஜெ.செந்தில்குமார் குமரன் காலனி, தசரதபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் 129-வது வார்டு பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஜெ.செந்தில்குமார் குமரன் காலனி, தசரதபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருக்கு பொது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். அவர்களிடம், “என்னைப்பற்றிய அனைத்து விபரங்களையும் உங்களிடம் நோட்டீசாக கொடுத்துள்ளேன். நமது வார்டு மேம்படுத்துவது குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வைத்துள்ளேன். நம்வார்டு நம்மக்கள் என்று வார்டு முழுவதும் பொது மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து முடிப்பேன்.
உங்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் முன்னின்று செய்வேன். தேர்தலுக்காக நான் கொடுக்கும் வாக்குறுதி அல்ல. சொன்னதோடு நிற்க மாட்டேன் செய்வதை தான் சொல்வேன்” என்றார்.