உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. வேட்பாளர் மஞ்சு பார்கவி தீவிர ஓட்டு சேகரிப்பு

சென்னை 113-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் மஞ்சு பார்கவி தீவிர ஓட்டு சேகரிப்பு

Published On 2022-02-14 17:59 IST   |   Update On 2022-02-14 17:59:00 IST
சென்னை மாநகராட்சி தேர்தலில் 113வது வார்டு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மஞ்சு பார்கவி வீடு வீடாக சென்று தாமரை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை:

சென்னை மாநகராட்சி தேர்தலில் 113வது வார்டு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மஞ்சு பார்கவி வீடு வீடாக சென்று தாமரை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வார்டு மக்களுக்காக முழு நேரமும் உழைப்பேன். அடிப்படை வசதிகளை செய்வேன். மக்கள் எந்த நேரமும் என்னை அணுகி குறைகளை சொல்லலாம். முன்மாதிரி வார்டாக மேம்படுத்தி காட்டுவேன் என்றேல்லாம் வாக்குறுதிகள் அளித்து ஓட்டு கேட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மஞ்சு பார்கவிவை ஆதரித்து முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் பிரசாரம் செய்தார். அப்போது கராத்தே தியாகராஜன் பேசும்போது, ‘’மஞ்சு பார்கவியை வெற்றி பெறச் செய்யுங்கள் அவர் ஜெயித்தால் 24 மணிநேரமும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து இந்த பகுதியின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க பாடுபடுவார்.

நமது வெற்றிச்சின்னம் தாமரை, இந்த பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தி.மு.க. எம்.எல்.ஏ தீர்க்கவில்லை. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நமது கட்சி தலைவர் அண்ணாமலையின் ஆசிபெற்ற வேட்பாளராக போட்டியிடும் மஞ்சு பார் கவியை வெற்றி பெறச்செய்யுங்கள். ஏற்கனவே மழை வெள்ளம், கொரோனா பிரச்சினைகளில் பொது மக்களுக்கு நேரடியாக சென்று அவர் உதவி இருக்கிறார்.

அவர் சேவை செய்வதற்காகவே வந்து இருக்கிறார். உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யகாத்து இருக்கிறார். இந்த பகுதியில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவதாகவும் கழுவு நீர் அடைப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதிகாரிகளிடம் போராடி பேசி அதற்கு நிரந்தர தீர்வு காண்பார். தேர்தலில் போலீசாரும் அதிகாரிகளும் நியாயமாக நடக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிக்கிறோம். உளவு துறையில் எங்களுக்கும் ஆட்கள் உள்ளனர் ’ என்றார். அவருடன் பா.ஜ.க நிர்வாகிகள் தொண்டர்களும் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.

Similar News