உள்ளூர் செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர்களின் உருவ படம் தாங்கிய அலங்கார ஊர்திகள்

கடலூர் மாவட்டத்துக்கு வந்த சுதந்திர போராட்ட வீரர்களின் உருவ படம் தாங்கிய அலங்கார ஊர்திகள்

Published On 2022-02-14 17:18 IST   |   Update On 2022-02-14 17:18:00 IST
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி/கல்லூரி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர்:

இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி/கல்லூரி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 2 அலங்கார ஊர்திகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

சுதந்திர போராட்ட வீரர்கள், உருவ படங்களை தாங்கிய இந்த அலங்கார ஊர்திகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவலூர் ஊராட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதை சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி, மாணவ, மாணவிகள் அலங்கார ஊர்திகளை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

மேலும், நாட்டுப்புறக் கலைஞர்களின் தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது, மாணவ, மாணவிகளுக்கு 'விடுதலைப்போரில் தமிழகம்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் மற்றும் மாறுவேட போட்டிகள் நடத்தப்பட்டு இப்போட்டிகளில் சிறப்பாக பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)ரஞ்ஜீத் சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News