உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வினர் ஓட்டு சேகரிப்பு

சாலையில் குத்தாட்டம் போட்டு தி.மு.க.வினர் ஓட்டு சேகரிப்பு

Published On 2022-02-14 16:54 IST   |   Update On 2022-02-14 16:54:00 IST
போச்சம்பள்ளி அருகே, சாலையில் குத்தாட்டம் போட்டு, தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் ஓட்டு சேகரித்தனர்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகோஜனஹள்ளி டவுன் பஞ்சாயத்தில் என். தட்டக்கல்லில் பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் ஓட்டு சேகரித்தனர்.

அப்போது மத்தூர் ஒன்றிய சேர்மன் மற்றும் சில பெண்கள் நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் சாலையில் குத்தாட்டம் போட்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தனர். நடனம் ஆடி வித்தியாசமான முறையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Similar News