உள்ளூர் செய்திகள்
திருமாவளவன்

45-வது வார்டில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்

Published On 2022-02-14 16:38 IST   |   Update On 2022-02-14 16:38:00 IST
மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபிநாத்தை வெற்றி பெறச்செய்து சென்னை மாநகராட்சி பெருமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
சென்னை:

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 45-வது வார்டில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் கோ.கோபிநாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கூட்டணி கட்சிகளின் பலத்தோடு வீதி வீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தென்னை மரம் கன்றுகளை கொண்டு சென்று மக்களிடையே சின்னத்தை காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் வேட்பாளர் கோ. கோபிநாத்தை ஆதரித்து கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வியாசர்பாடியில் பிரசாரம் செய்தார். அங்கு திரண்டு இருந்த பொது மக்கள் மத்தியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தம்பி கோபிநாத்தை வெற்றி பெறச்செய்து சென்னை மாநகராட்சி பெருமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏழை- எளிய மக்களில் ஒருவராக இருந்து மக்கள் சேவை ஆற்றுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றார்.

Similar News