உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி பஸ் நிலையத்தில் கிடந்த மூட்டை

திட்டக்குடி பஸ் நிலையத்தில் கிடந்த மூட்டையால் பரபரப்பு

Published On 2022-02-14 16:14 IST   |   Update On 2022-02-14 16:14:00 IST
மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான பஸ்நிலையத்தில் திடீர் என மூட்டை ஒன்றை வீசி சென்றதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ்நிலையத்தில் சிறிய சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டையைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

இதை பஸ் நிலையத்தில் வீசிச்சென்றவர்கள் யார்? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகம் நடமாடும்  பகுதியான பஸ்நிலையத்தில் திடீர் என மூட்டை ஒன்றை வீசி சென்றதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News