உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரோஜா பூக்கள்.

காதலர்தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை உயர்வு

Published On 2022-02-14 16:11 IST   |   Update On 2022-02-14 16:11:00 IST
முகூர்த்த நாட்களில் ஒரு ரோஜா 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படும்.
உடுமலை:

காதலர் தினத்தையொட்டி, உடுமலையில் விற்பனை செய்யப்படும் ரோஜாக்களின் விலை உயர்ந்தது. உடுமலை பூ மார்க்கெட்டிற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் ரோஜாக்கள் விற்கப்படுகின்றன.

வழக்கமாக ஒரு ரோஜா பூ 5 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று காதலர் தினத்தையொட்டி, ரோஜா பூக்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சிகப்பு ரோஜா 80 ரூபாய்க்கும், பிற வகை ரோஜா தலா 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாபாரிகள் கூறுகையில்:

பல வண்ணங்களில் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் ஒரு ரோஜா 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படும். தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களும் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர லில்லியம், கார்னேஷன், பேர்ட் ஆப் பேரடைஸ், ஆந்தோரியம் உள்ளிட்ட உள்ளிட்ட பூக்களும் விற்கப்படுகிறது என்றனர்.

Similar News