உள்ளூர் செய்திகள்
மாணவிக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு தொகை

Published On 2022-02-14 15:30 IST   |   Update On 2022-02-14 15:30:00 IST
ஏரியூர் அருகே மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
பென்னாகரம்:

தருமபுரியில் காந்தி ஜெயந்தி மற்றும் நேரு நினைவு நாளில் மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. 

இதில் மாவட்டத்தில் இருந்து 86 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், ஏரியூர் அருகேயுள்ள சின்னவத்தலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் மகள் சின்ன வத்தலாபுரம் அரசு பள்ளியில் படித்த சௌபரணி சிறப்பிடம் பெற்று, பரிசு தொகையாக வழங்கிய 4000 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். 

அதனை சிறப்பிக்கும் வகையில், தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, அண்மையில்  பாராட்டுக்களை தெரிவித்து நற்சான்றிதழை  வழங்கினார். 

இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில், சின்ன வத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாண வியை கவுரவிக்கும் வகையில் ராமகொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தங்கராஜ், பொது அறிவு புத்தகம், எழுதுகோல் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். 

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் அங்கமுத்து, சின்ன வத்தலாபுரம் நடுநிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் சங்க தலைவர் ராஜா, உதவி தலைமையாசிரியர் ஜெயமணி, ஊராட்சி செயலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News