உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வழக்கு

Published On 2022-02-14 15:18 IST   |   Update On 2022-02-14 15:18:00 IST
தஞ்சையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 42). இவரது மனைவி நாகலட்சுமி (40). 

இந்நிலையில் அண்ணாமலை குடிபோதையில் நாகலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் நாகலட்சுமி கோபித்து கொண்டு தஞ்சை புதுக்கோட்டை ரோடு ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் அங்கும் வந்து அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இது குறித்து நாகலட்சுமி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News