உள்ளூர் செய்திகள்
கஞ்சா செடி பயிரிட்டு கைதான கருப்பசாமி.

சதுரகிரி மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

Published On 2022-02-14 15:08 IST   |   Update On 2022-02-14 15:08:00 IST
சதுரகிரி மலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு சொந்தமான சூரியன்ஊத்து என்ற பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக சாப்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருமங்கலம்:

திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே சாப்டூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இதன் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.

இந்த நிலையில் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள மெய்யனுத்தன்பட்டி பகுதியில் இருந்து சதுரகிரி மலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு சொந்தமான சூரியன்ஊத்து என்ற பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக சாப்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் பேரையூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து 17 குழிகள் கொண்ட 10 நாள்களே ஆன கஞ்சா செடிகள் நாத்து பறிமுதல் செய்து வனத்துறையினர் அழித்தனர்.

இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள செம்பட்டையன்கல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(வயது 52) என்பவரை கைது செய்து சாப்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 3 பேரை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News