உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே அரசு பஸ் கல் வீசி உடைப்பு - பரபரப்பு
மார்த்தாண்டம் அருகே அரசு பஸ் கல் வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனையில் உள்ள அரசு பஸ் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நேசர்புரம் சென்றது இரவு அந்த பஸ் நட்டாலம் ஸ்டார் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது நள்ளிரவில் 12 மணிக்கு பஸ்சை ஒருவர் கல்வீசி உடைத்துள்ளார்.
இதுகுறித்து பஸ் டிரைவர் விஜயகோபால் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று கல்வீசி உடைத்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஆந்திராவைச் சேர்ந்த மனநலம் பாதித்தவர் எனவும் அவர் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் சுற்றி திரிவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.