உள்ளூர் செய்திகள்
போடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தேனி மாவட்டம் போடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1972 73ம் ஆண்டில் 10ம் வகுப்பு பயின்ற 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பலர் தொழிலதிபர்களாகவும், அரசு ஊழியர்களாகவும், விவசாயிகளாகவும், குடும்ப தலைவிகளாகவும் வாழ்ந்து வந்த நிலையில் ஒன்றாக சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் 110 முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பள்ளி செயலாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 200 புத்தகங்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
மேலும் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.