உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் தூய்மை பணியாளர் தம்பதியினருக்கு இலவச வேட்டி - சேலை
காதலர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி வேலாயுதபுரம் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தூய்மை பணியாளர் தம்பதியினருக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
காதலர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி வேலாயுதபுரம் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி நகராட்சியில் 5 பிரிவுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களில் சிறந்த தம்பதியினருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி பழைய நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த மாரிமுத்து வரவேற்றார். முத்துமாரியப்பன், செல்வம், அலம்பட்டி கணேசன், ஜாகிர் உசேன், 20-வது வார்டு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரஜினி ரசிகர் மன்ற மாரிமுத்து, கார்த்திகேயன், நகர இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், சீனிவாசன், ராஜ மனுவேல், ஜோதி காமாட்சி, ரஜினி ரசிகர் மன்ற ஒன்றியம் பாண்டியராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தூய்மை பணியாளர்களில் சிறந்த தம்பதியினருக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.
இளைஞரணி செல்வம் நன்றி கூறினார். இதில் காளியப்பராஜ், முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.