உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை அருகே இலவச கண் சிகிச்சை முகாம்
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்துள்ள இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் விசுவநாதபுரம் அரசமரம் கண்குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்கான சேவை அமைப்பின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். அரசமரம் கண்குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்கான சேவை அமைப்பின் நிறுவனர் மன்சூர் வரவேற்று பேசினார்.
முகாமில் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் ஹரிவர்ஷன் தலைமையில் கண்சிகிச்சை முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் விழிஒளி ஆய்வாளர் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளர் ரிதுகிருஷ்ணா, ஸ்ரீலெட்சுமி, ஹீமா கண்நல ஆலோசகர் தாசன்ராஜ், மருத்துவக்குழுவினர் கண் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
மேலும் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. கண்ணில் புரை உள்ளவர்களுக்கு இலவசமாக விழிலென்ஸ் (ஐஒஎல்) பொருத்துதல், உணவு, தங்குமிடம் மற்றும் சொட்டுமருந்து இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இலத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணபதி, சங்கரசுப்பு, சொர்ணலதா, ராணி, வனிதா, மாரியம்மாள், ராமலெட்சுமி, அம்பேத்மணி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் இலத்து£ர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். சேவை அமைப்பின் மேலாளா¢ விஜயலெட்சுமி நன்றி கூறினார்.