உள்ளூர் செய்திகள்
புனித லூர்து அன்னை ஆலய விழாவில் திருப்பலி நடைபெற்ற போது எடுத்த படம்.

தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

Published On 2022-02-14 13:42 IST   |   Update On 2022-02-14 13:42:00 IST
தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் கீழவைப்பார் பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீசன் மறை உரை நிகழ்த்தினார். புனித மத்தேயு மண்டலத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். 

பின்னர் 12-ந்தேதி காலை திருப்பலி நடைபெற்றது. மார்க் மண்டலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை ஜெபமாலை, மாலை ஆராதனை மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் நற்செய்தி நடுவே இயக்குனர் ஸ்டார்வின் மறையுரை நிகழ்த்தினார். புனித லூக்கா மண்டலத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை கோலாகலமாக புனித லூர்து அன்னையின் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில் முன்னாள் மறைமாவட்ட முதன்மை குரு செல்வராஜ், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர் திருப்பலியை நடத்தினர். 

தொடர்ந்து சிறுவர்-சிறுமியர் புதுநன்மை விருந்தும் திரளான மக்கள் மத்தியில் நடைபெற்றது. புனித யோவான் மண்டலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.

Similar News