உள்ளூர் செய்திகள்
மனநலம் பாதித்த முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு
திருத்துறைப்பூண்டியில் சுற்றிதிரிந்த மனநலம் பாதித்த முதியவரை மீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் பஸ் நிலையத்தில் திரிந்த 75 வயது மதிக்கத்தக்கவர் குறித்து தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சென்று விசாரித்து உடனடியாக நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன், காப்பாளர் விஜயா சென்று விசாரித்துஅந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் தற்காலிக பாதுகாப்பிற்காக சேர்த்தனர். அந்த முதியவர் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் என்பவது தெரியவந்ததையடுத்து இதுபற்றி அதிரை இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்து அவரது உறவினரை கண்டறிந்து முதியவரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் கழனியப்பன் கூறினார்.
முதியவரை மனிதநேய அடிப்படையில் மீட்டு காப்பகத்தில் சேர்க்க உதவிய இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.