உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் வீரக்குமார சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா தொடக்கம்
2-ந் தேதி மாலை தேரோட்டம், 3-ந் தேதி மாலை தேர் நிலை சேர்த்தல் ஆகியன நடக்கிறது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமார சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி 139ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை தேர் முகூர்த்தகால் அமைத்து பூஜை நடைபெற்றது.
வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் தேர் கலசம் வைத்தல், அடுத்த மாதம் 1-ந் தேதி 10 மணிக்கு மேல் 12 மணிக்கு வீரக்குமார சுவாமி தேருக்கு எழுந்தருள செய்தல், மாலை, 4.30 மணி அளவில் பல்லய பூஜை, இரவு 7 மணிக்கு தேர் நிலை வடம் பிடித்தல், 2-ந் தேதி மாலை தேரோட்டம், 3-ந் தேதி மாலை தேர்நிலை சேர்த்தல் ஆகியன நடக்கிறது.