உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய் வசந்த்
கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வசந்த் எம்.பி. வாக்கு சேகரித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரசாரத்தின்போது திமுக ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர்கள் கிங்ஸ்லின், ஹரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜன், அகஸ்திலிங்கம், சேகர் உள்பட காங்கிரஸ், திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.