உள்ளூர் செய்திகள்
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்ருட்டியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

Published On 2022-02-13 16:49 IST   |   Update On 2022-02-13 16:52:00 IST
பண்ருட்டியில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.81,450 பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ருட்டி:

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டு உள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தொரப்பாடி பேரூராட்சியில்பறக்கும் படை துணை தாசில்தார் ராஜீ,சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம், முதல்நிலை காவலர்கள் சந்திரசேகரன், கோவிந்தசாமி ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் ரூ. 81, 450 பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News