உள்ளூர் செய்திகள்
காய்கறிகளை வெட்டி கொடுத்து ஓட்டு கேட்கும் பெண் வேட்பாளர்

ஈரோட்டில் வீடு, வீடாக சென்று காய்கறிகளை வெட்டி கொடுத்து ஓட்டு கேட்கும் பெண் வேட்பாளர்

Published On 2022-02-12 13:36 GMT   |   Update On 2022-02-12 13:36 GMT
ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் காலை 6 மணி முதலே வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வேட்பாளர்கள் நூதன முறையில் வித்தியாசமான அணுகு முறையால் பொதுமக்களை ஈர்த்து வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் வீடு, வீடாக பெண்களின் சமையல் அறைக்கே சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அப்போது காய்கறிகளையும் வெட்டி கொடுத்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகிறார். வயதில் மூத்தோர்களின் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News