உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 169 தென்னங்கன்றுகள் பறிமுதல்

Published On 2022-02-12 15:39 IST   |   Update On 2022-02-12 15:39:00 IST
வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 169 தென்னங்கன்றுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட் டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களைக் கவர்ந்திட பரிசுப்பொருட்கள் வழங்குதல் போன்ற முறைகேடுகளைத் தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று நகராட்சியின் 10-வது வார்டில் வாக்காளர்களை கவர்வதற்காக அந்த வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தனது தென்னை மர சின்னத்தை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் விதமான வாக்காளர்களின் வீட்டுக்கு ஒரு தென்னை மரக்கன்றினை வழங்க 

2 சிறிய ரக சரக்கு வாகனங்களில் ஒன்றில் 107, மற்றொன்றில் 62 என மொத்தம் 169 தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து வீடு வீடாக விநியோகிக்க முற்பட்டுள்ளார்.
 
அப்போது தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த ஆலத்தூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையனினர் துறை மங்கலம் 10-வது வார்டு பள்ளிவாசல் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் வாக்காளர் வீடுகளுக்கு வழங்க இருந்த ரூ.42,250 மதிப்பிலான 169 தென்னை மரக்கன்றுகளை பறிமுதல் செய்து பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.

Similar News