உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் மொத்தம் 411 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 58 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என மொத்தம் 81 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 74 வாக்குச் சாவடிகளில் 20 வாக்குசாவடிகள் மிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக உள்ளது.
ஆற்காடு நகராட்சியில் உள்ள 59 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குசாவடிகள் இல்லை. மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 42 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை.
ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 47 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக உள்ளன. சோளிங்கர் நகராட்சியில் உள்ள 35 வாக்குச் சாவடிகளில் 7 வாக்கு சாவடிகள் மிக பதற்றமானவையாக உள்ளது.
வாலாஜா நகராட்சியில் உள்ள 32 வாக்குச் சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாக உள்ளது. 6 நகராட்சிகளில் உள்ள 289 வாக்குச்சாவடிகளில் 23 பதற்றமான மற்றும் 42 மிக பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளன.
அதேபோல் அம்மூர் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குசாவடிகளில் 5 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை, கலவை, காவேரிபாக்கம், நெமிலி, பனப்பாக்கம்,
தக்கோலம் பேரூராட்சிகளில் உள்ள தலா 15 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை. திமிரி பேரூராட்சியில் உள்ள 17 வாக்குச்சாவடிகளில் 7 மிக பதற்றமான வாக்குச் சாவடிகள், விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் 4 மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 122 வாக்குச்சாவடிகளில் 16 மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நியாயமாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக சிசிடிவி கேமரா ஆன்லைன் வெப்ஸ்டீம்மிங் கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது