உள்ளூர் செய்திகள்
பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 183 மதுபாட்டில்கள் பறிமுதல்
பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 183 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் துரைராஜ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு லப்பைக்குடிகாட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெண்ணகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் அதிகாரிகளைக் கண்டதும் தாங்கள் எடுத்துச் சென்ற 39 மதுப்பாட்டில்களை போட்டு விட்டு தப்பித்துச் சென்று விட்டனர். அந்த மதுபாட்டில்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதே போல பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தனி வட்டாட்சியர் பொன்னுதுரை தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மேலப்புலியூரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 21) என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.