உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பிக்கப் வேனையும், ரேசன் அரிசி கடத்தியவரையும் படத்தில் காணலாம்.

கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-02-10 16:26 IST   |   Update On 2022-02-10 16:26:00 IST
கர்நாடகாவுக்கு 3 டன் ரேஷன் அரிசியை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மற்றும் பூவரசன், தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, தளி அடுத்த ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். 

அப்போது அவ்வழியே வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டதில், 60 மூட்டைகளில், 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம், கனகபுரா கொலகாண்டஹள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 30), அவரது தம்பி சூர்யா(28) என்பதும், அவர்கள் தளி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. 

பிக்வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News