உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

களைகொல்லிகளால் அழியும் மூலிகைகள்

Published On 2022-02-10 11:50 IST   |   Update On 2022-02-10 11:50:00 IST
களைக்கொல்லிகளை தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தில் வளரும் களைகள் மட்டுமல்லாமல் அரிய வகை மூலிகைகள் முற்றிலும் அழிந்து வருகின்றன.
திருப்பூர்:

விவசாயத்தில் களைக்கொல்லிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தில் இருக்கும் செடி, கொடிகள், புற்களை முற்றிலும் அழிக்க ஒரு களைக்கொல்லி, சிறு புல் வகைகளை அழிக்க, செடிகளை மட்டுமே அழிக்க என விதவிதமான களைக்கொல்லிகள் பெருகிவிட்டன.

களை வெட்டுவதற்கு ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை குறைக்கவும், உழவு ஓட்டும் செலவை குறைக்கவும் களைக்கொல்லிகளை விவசாயிகள் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

களைக்கொல்லிகளை தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தில் வளரும் களைகள் மட்டுமல்லாமல் அரிய வகை மூலிகைகள் முற்றிலும் அழிந்து வருகின்றன. மேலும் மண் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் நிலத்தில் பயிர்கள் வளராமல் நிலம் மலட்டுத் தன்மையை அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்:

நோய்களை குணப்படுத்த பிரத்யேக, மூலிகைகள் இயற்கையாகவே வளர்ந்துள்ளன. கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய், மடிநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை குணப்படுத்தவும் மூலிகைகள் பயன்படுகின்றன. களைக் கொல்லிகளால் பெரும்பாலான மூலிகைகள் அழிந்து வருகின்றன. வருங்காலத்தில் மூலிகைச் செடிகள் இல்லாத வெற்று நிலங்களாக மாறி விடும்‘’என்றனர்.

Similar News