உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தொடங்கியது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று காலை தொடங்கியது. தமிழ்பாடத்திற்கான தேர்வுகள் இன்று நடந்தது. 9,511 மாணவர்களும், 9,403 மாணவிகள் என மொத்தம் 18,914 மாணவ மாணவிகள் திருப்புதல் தேர்வு எழுதினர்.
அதேபோல் இன்று மாலை பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடந்தது. 7,511 மாணவர்களும், 8,523 மாணவிகள் என மொத்தம் 16,043 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்வு பணிகளை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
பள்ளித்துணை ஆய்வாளர் மணிவாசகம்,, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா உதவி தலைமையாசிரியை டி.என்.ஷோபா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நாஜனார்தனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.