உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தஞ்சை மாவட்டத்துக்கு 905 வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு

Published On 2022-02-09 07:56 GMT   |   Update On 2022-02-09 07:56 GMT
தஞ்சை மாவட்டத்திற்கு 905 வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 2022&ஆம் ஆண்டு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இரண்டாவது சீரற்ற மையமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வைத்திநாதன் ஆகியோர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:&

தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கு 750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவிற்கு  பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இரண்டாவது சீரற்ற மையமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. 
 
வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படும் 905 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும், 905 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)ரங்கராஜன், மாவட்ட தகவலியல் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ஸ்டான்லி வில்லியம்ஸ்,  மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மங்கையற்கரசி,  அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு 
அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News