உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

Published On 2022-02-09 11:54 IST   |   Update On 2022-02-09 11:54:00 IST
பேரளம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பேரளம்&காரைக்கால் சாலையில், பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் ஆகியோர் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மன்னார்குடி காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முகமது இர்பான் (வயது 22) என்பவர் எந்தவிதமான ஆவணமும் இன்றி கொண்டு வந்த ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 953-ஐ பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேரளம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஒப்படைக்கப்பட்டது.

Similar News