உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை பறக்கும் படையினர் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த காட்சி.

கோவில்பட்டியில் ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு சென்ற ரூ.89 ஆயிரம் பறிமுதல்

Published On 2022-02-09 06:04 GMT   |   Update On 2022-02-09 06:04 GMT
கோவில்பட்டியில் இன்று ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு சென்ற ரூ. 89 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று காலை தாசில்தார் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் செல்வகுமார், செல்வி ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எட்டயபுரம் பல்லக்கு ரோட்டில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ. 89 ஆயிரத்து 800 பணம் இருந்தது.

விசாரணையில் லாரியில் சென்றது கோவில்பட்டி பூர்ணம்மாள் காலனியை சேர்ந்த சம்சுதீன் என்பதும், பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் கூறும்போது, தான் மாடுவியாபாரி என்றும், மணப்பாறையில் இருந்து மாடுகளை விற்றுவிட்டு அந்த பணத்தை கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனினும் ஆவணங்கள் இல்லாததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News