உள்ளூர் செய்திகள்
போளூர் அருகே விவசாயிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
போளூர் அருகே விவசாயிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
போளூர்:
போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார் பெண் போலீஸ் சங்கீதா தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது களம்பூர் இறப்ப குணம் இடையே உள்ள கூட்ரோட்டில் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த படவேடு மங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார்(45) விவசாயி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்தை வைத்திருந்தார்.
குடும்பத் தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால் பறக்கும் படையினர் அவர் கூறிய காரணத்தை ஏற்கவில்லை.
இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.