உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தேசிய திறனறி போட்டி- பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

Published On 2022-02-08 06:14 GMT   |   Update On 2022-02-08 06:14 GMT
பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியானது இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக ‘ஆன்லைன்’ வாயிலாக போட்டி நடத்தப்படும்.
உடுமலை:

ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் திருவிழா நடத்தப்படவுள்ளது. அவ்வகையில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற கருத்தை மையமாகக்கொண்டு திறனறி போட்டி நடத்தப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியானது இரு கட்டங்களாக நடத்தப்படும். 

முதல் கட்டமாக 'ஆன்லைன்' வாயிலாக போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுவோர் இரண்டாம் கட்ட போட்டிக்கு அழைக்கப்படுவர். அதன்படி ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றாற்போல் ஓவியம், வினாடி வினா மற்றும் புகைப்படப்போட்டி இடம் பெறுகிறது.

இரண்டாம் கட்டப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

எனவே போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர், https://forms.gle/BGAinwrCKaMsZF9MA என்ற இணைப்பு வாயிலாக பதிவு செய்யலாம். இதற்கு வரும் 20-ந்தேதி கடைசி நாளாகும். 

தகவல் அறிய ஒருங்கிணைப்பாளரை 8778201926  என்ற செல்போன் எண், galilioscienceclub@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News