உள்ளூர் செய்திகள்
செய்யாறில் மது விற்ற 15 பேர் மீது வழக்கு
செய்யாறு அருகே மது விற்ற 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செய்யாறு:
செய்யாறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செய்யாறு டி.எஸ்.பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு, மோரணம், அனக்காவூர், தூசி, பிரம்மதேசம், பெரணமல்லூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர்களை மடக்கி பிடித்து மது விற்பனை செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.