உள்ளூர் செய்திகள்
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு.

நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Published On 2022-02-07 13:38 IST   |   Update On 2022-02-07 13:38:00 IST
சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
சீர்காழி:

சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் சூரக்காடு பகுதியில் உப்பனாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் கோழி கழிவுகள் தினந்தோறும் எங்கிருந்தோ கொண்டு வந்து சிலர் கொட்டி செல்கின்றனர். 

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திறந்த வெளியில் கொட்டப்படும் கோழி கழிவுகளை நாய், காக்கைகள் தூக்கி சென்று குடியிருப்பு பகுதிகளில் போட்டு செல்வதால் குடியிருப்புவாசிகளும் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். 

ஆகையால் காரைமேடு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோழி கழிவுகளை கொட்டாமல் தடுப்பதோடு அங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News