உள்ளூர் செய்திகள்
தற்கொலை

காதலன் வேறு பெண்ணுடன் பழகியதால் பள்ளி மாணவி தற்கொலை

Published On 2022-02-06 16:07 IST   |   Update On 2022-02-06 16:07:00 IST
மதுரவாயலில் காதலன் வேறு பெண்ணுடன் பழகியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுமி கோயம்பேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், ராதா கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கிருந்த சிறுமியின் நோட்டு புத்தகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில், ‘‘வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். ஆனால் அந்த வாலிபர் என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று எழுதி வைத்து இருந்தார்.

இதனை வைத்து மாணவியுடன் பழகிய வாலிபர் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Similar News