உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சூலூரில் மதுபோதையில் தீக்குளித்து தற்கொலை செய்த பெண்

Published On 2022-02-06 15:58 IST   |   Update On 2022-02-06 15:58:00 IST
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள புளியமரத்து பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தாமணி (வயது 45). இவர் வேடப்பட்டி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். 
 
சம்பவத்தன்று இவர் சுல்தான்பேட்டை அருகே உள்ள செலக்கரைச்சல் பகுதியில் இருக்கும் பழைய பிளாஸ்டிக் கடைக்கு சென்றார். அங்கு வைத்து மது குடித்தார். மது போதையில் இருந்த அவர் திடீரென மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்தார். 

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சாந்தாமணியை மீட்டனர். 

பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சாந்தாமணி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் கணவர் பிரிந்து சென்ற விரக்தியிலும், மகனுக்கு பெண் கிடைக்காததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Similar News