உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு
நாமக்கல்லில் ரெயில்வே பாலம் அருகில் உள்ள பிரிட்ஜ் கடை உள்பட அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு நடந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் திருச்சி சாலை ரெயில்வே பாலம் கீழ் பகுதியில் உள்ள பிரிட்ஜ் கடை, கோழி பண்ணைகளுக்கு வழங்கும் உபகரணம் விற்பனை கடை என அடுத்தடுத்து 4 கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் சம்பவத்தன்று அதன் உரிமையாளர்கள் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலையில் இந்த கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பேக், பென் டிரைவ் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கார் பட்டறையில் சர்வீஸ் செய்யும் பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களை கொண்டு தடவியல் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.