உள்ளூர் செய்திகள்
சாலையோரம் நின்ற போது பரிதாபம் மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி சாலையோரம் நின்ற லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்
ஓசூர்:
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பனரா சித்தாத் (வயது 57). லாரி டிரைவர். ஓசூருக்கு வந்திருந்த அவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பனரா சித்தாத் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பனரா சித்தாத் இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.