உள்ளூர் செய்திகள்
மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார் - எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு ரத்து செய்வற்கான மந்திரம் எங்களிடம் இருக்கிறது என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அது என்ன என்று இன்னும் வெளியே சொல்லாமல் வைத்திருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெரியசோரகை பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நங்கவள்ளியில் பகுதியில் பிரசாரத்தின்போது பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்து தி.மு.க. வெற்றி பெற்று விட்டது. அந்த சூழ்நிலையில் தமிழக அரசினுடைய நிதி நிலைமை பற்றி மு.க.ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். அப்படி தெரிந்து இருந்தும் இப்படி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து செயல்படுத்த முடியாத திட்டங்களை மக்களிடம் சொல்லி ஓட்டுக்களை வாங்கி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றார்கள். இப்போது ஏன் அந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று சட்டசபையில் கேட்டால் நிதி நிலைமை சரியில்லை என்கிறார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வற்கான மந்திரம் எங்களிடம் இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அந்த மந்திரம் என்ன என்று இன்னும் வெளியே சொல்லாமல் வைத்திருக்கிறார்.
பொங்கல் தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. இதை மறைக்கவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தற்போது மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.
நான் முதல்- அமைச்சராக இருந்த காலத்தில் நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிக்கு நிறை திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதையும் படியுங்கள்...