உள்ளூர் செய்திகள்
சித்தர்கோவில் அலுவலகத்தை இந்து முன்னணி முற்றுகை
சேலம் அருகே சித்தர்கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்திபெற்ற கஞ்சமலை சித்தர் ஆலயம் உள்ளது.
இங்குபக்தர்களால் நேர்த்திகடனாக வழங்கப்படும் பசுமாடுகளை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன் சாலையில் விபத்துக்குள்ளாகி கால் உடைந்தது.
ஆகவே திருக்கோவிலுக்கு பக்தர்களால் நேர்த்திகடனாக வழங்கப்படும் பசுமாடுகளை பராமரிக்கும் வகையில் கோசாலை அமைக்க வேண்டும் என இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக இந்து முன்னணியினர் கோவில் செயல் அலுவலகத்தை முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.