உள்ளூர் செய்திகள்
திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற எங்களது இல்ல திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ்&விஜயலட்சுமி காமராஜ் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க செயலாளர் எஸ்.காமராஜ்-விஜயலட்சுமி காமராஜ் இல்ல திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த திருமணத்தை அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
திருமண விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்று எஸ்.காமராஜ்- விஜயலட்சுமி காமராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
எங்களது மகள் டாக்டர் தரணிக்கும், ஒக்கநாடு கீழையூர் மேலத்தெருவை சேர்ந்த சாம்பமூர்த்தி சேந்த முடையார்- ராஜேஸ்வரி தம்பதியின் மகன் டாக்டர் எஸ்.துளசி அய்யாவுக்கும் இன்று தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மஹாராஜா மஹாலில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அவருக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இதேபோல், திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்திய அ.ம.மு.க நிர்வாகிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு முக்கியத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.