உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் கொரோனாவுக்கு குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-02-06 15:23 IST   |   Update On 2022-02-06 15:23:00 IST
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நேற்று 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். 

ஏற்கனவே ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்று வந்த 856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 7141 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 16 ஆயிரத்து 210 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு 1748 பேர் பலியானார்கள்.

கொரோனா பாதிப்பு குறைந்துவரும் அதே வேளையில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால் சுகாதார், மருத்துவ துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News